2025 மே 13, செவ்வாய்க்கிழமை

இம்முறை இலத்திரனியல் வாக்களிப்பு?

Editorial   / 2020 ஏப்ரல் 23 , மு.ப. 12:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டில் தற்போது அசாதாரண சூழல் நிலவிவரும் நிலையில், இலத்திரனியல் முறையல் பொதுத் தேர்தலை நடத்துவதற்கான பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

அந்த வகையில், வாக்காளர்கள், அதிகாரிகள், பொலிஸார், இராணுவத்தினர் ஆகியோர் அனைவரும், கொவிட்-19 பாதிப்புக்கு உள்ளாவதை குறைக்கும் வகையில், பொதுத் தேர்தலை நடத்துவதற்கு மூன்று வலிமுறைகள் உள்ளன என, ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் ஜயந்த லால் ரட்ணசேகர தெரிவித்தார்.

பாரிய கடதாரிகளைப் பயன்படுத்தாமல், பல அதிகாரிகளை தேர்தல் வேலைக்காக வெளியில் கொண்டு வராமல், வாக்காளர்களை அதிகளவு வாக்களிப்பு நிலையங்களுக்கு வரவழைக்காமல், வாக்களிக்கும் இயந்திரத்தை அறிமுகப்படுத்தலாம் என்று அவர் கூறியுள்ளார்.

இரண்டாவதாக, வாக்குச்சீட்டை ஸ்கேன் செய்து அனுப்பும் முறையை அவர் குறிப்பிட்டுள்ளார். அதாவது, வாக்குச்சீட்டை வாக்காளர்கள் அதை அங்குள்ள ஸ்கேனின் இயந்திரம் மூலம் ஸ்கேன் செய்து அனுப்பிய பின்னர், அதை எண்ணி, முடிவைப் பெறுதல் என்பதும், இலத்திரனியல் வாக்குப் பதிவு முறைமைக்குள் உள்ளடங்கும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

மூன்றாவதாக, வாக்காளர்கள், தங்களது வாக்குகளை, தங்களது தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுப்பும் முறையும் உகந்தது என்றும் அவர் கூறியுள்ளார்.

“இந்த முறைமைகளை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கு தேவையான இயந்திரம் மற்றும் சட்ட ஒழுங்குமுறைகள் குறித்து, தேர்தல் ஆணையகம் தெரிந்திருக்கவேண்டும். தேர்தல்கள் ஆணையம், 15 வருடங்களுக்கு முன்னரே, இலத்திரயல் மூலமாக வாக்களிப்பு முறைமையை உருவாக்குவதற்கு, இணையத்தளம் மூலம் வேட்பாளர்களைப் பதிவு செய்யும் முயற்சியை முன்னெடுத்திருந்தது. அத்துடன், நாடாளுமன்றத்துக்குள் வாக்களிப்பதற்காக, ஏற்கெனவே இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன” என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

விருப்பம் இருந்தால் பல வழிகள் இருப்பதாக குறிப்பிட்டுள்ள அவர், கொவிட்-19இல் இருந்து பாதுகாப்பைப் பெற்றுக்கொள்வதற்கு, பொதுத் தேர்தலை, இலத்திரனியல் முறைமையில் நடத்துவதே மிகவும் சிறந்தது என்றும் இது அத்தியாவசியம் என்பதால், இதற்கென்று சட்டம் தேவையில்லை என்றும் அவர் கூறினா்.

முக்கிய தேர்தல் கண்காணிப்புக்கான அரச சார்பற்ற நிறுவனத்தின் பணிப்பாளர், நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கம் ஆகியவை, இல்திரனியல் மூலம் வாக்களிப்பை முன்னெடுப்பதை சிறப்பானது என்று கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X