2025 நவம்பர் 01, சனிக்கிழமை

இலங்கைக்கு மேலும் 264,000 தடுப்பூசிகள்

S. Shivany   / 2021 மார்ச் 07 , மு.ப. 08:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொவிட் ஒழிப்புக்காக உலக சுகாதார ஸ்தாபனத்தின் வசதிப்படுத்தலின் கீழ், 20 சதவீத தடுப்பூசிகள், இன்று(07) அதிகாலை விசேட விமானம் மூலம் நாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளன.

இதற்கமைய, 264,000 எஸ்ட்ரா ஸ்னேகா தடுப்பூசிகள் முதற்கட்டமாக நாட்டுக்கு கிடைத்துள்ளதாக, இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோ புள்ளே தெரிவித்துள்ளார்.

யுனிசெப் நிறுவனத்தால் கொள்வனவு செய்யப்பட்ட மேற்படி தடுப்பூசிகள், உலக சுகாதார ஸ்தாபனத்தின் கொவெக்ஸ் வேலைத்திட்டத்தின் கீழ் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

இந்த தடுப்பூசிகள் 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு வழங்கப்படவுள்ளதாக, இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோ புள்ளே தெரிவித்துள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X