Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
Nirshan Ramanujam / 2017 ஓகஸ்ட் 02 , பி.ப. 05:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையில் இலத்திரனியல் கடவுச்சீட்டினை அறிமுகம் செய்வதற்கு அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது.
வடமேல் அபிவிருத்தி, கலாசார விவகார அமைச்சர் எஸ்.பி.நாவின்ன மற்றும் தொலைத்தொடர்புகள், டிஜிட்டல் உட்கட்டமைப்பு அமைச்சர் ஹரீன் பெர்ணான்டோ ஆகியோர் முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியதாக காணி மற்றும் நாடாளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சரும் அமைச்சரவை இணை பேச்சாளருமான கயந்த கருணாதிலக இன்று (02) தெரிவித்தார்.
வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்றபோதே அமைச்சர் இதனை தெரிவித்தார்.
இதன்பிரகாரம் இலங்கை பிரஜைகளுக்காக வேண்டி இலத்திரனியல் வெளிநாட்டு கடவுச்சீட்டு ஒன்றினை அறிமுகம் செய்வது தொடர்பிலான நடவடிக்கைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அதன் கீழ் அனைத்து வகை தகவல்களையும் உள்ளடக்கிய சிம் அட்டை வடிவிலான இலத்திரனியல் மாதிரி ஒன்று வெளியிடப்பட உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
9 hours ago
18 May 2025