2025 நவம்பர் 05, புதன்கிழமை

ஊரடங்கு தளர்த்தப்பட்டது

Editorial   / 2020 மார்ச் 30 , மு.ப. 06:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், யாழ்ப்பாணம், கண்டி மற்றும் பதுளை மாவட்டத்தின் சில பகுதிகளை தவிர நாட்டின் ஏனைய பகுதிகளில் ஊரடங்கு சட்டம் தற்காலிகமாக தளர்த்தப்பட்டுள்ளது.

இன்று (30) காலை 06 மணிக்கு தளர்த்தப்பட்ட ஊரடங்கு சட்டம் பிற்பகல் 02 மணிக்கும் அமுல்படுத்தப்படும்.

பதுளை மாவட்டத்தில் இன்று (30) ஊடரங்கு உத்தரவை தளர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள போதிலும், வெலிமடை, பண்டாரவளை, ஹப்புத்தளை, தியத்தலாவை ஆகிய நான்கு நகரங்களை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான அறிவிப்பு குறித்த பகுதிகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாக, பண்டாரவளை பொலிஸ் அதிகாரி அதுல டீ சில்வா தெரிவித்துள்ளார்.

அதிகளவு மக்கள் கூடுவதை தவிர்க்கும் நோக்கில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதுடன், அப்பகுதிகளில் உள்ள வர்த்தக நிலையங்களையும் மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X