Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2017 நவம்பர் 25 , மு.ப. 11:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
“ஊழல், மோசடிக்கு எதிராக தீர்மானங்களை எடுக்கும் போது, அதற்கு எதிராகவும் தனக்கு எதிராக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுமாயின், சகல பதவிகளை இராஜினாமா செய்துவிட்டு, மக்களுடன் கைகோர்த்து முன்னோக்கி பயணிப்பதற்கு தாம் தயாரென”, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
நிக்கவரெட்டிய பிரதேசத்தில், நேற்று (24) இடம்பெற்ற கூட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
“ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி அரசாங்கம், தவறு செய்தமையால் தான், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் வேட்பாளர் 2015 ஆம் ஆண்டு தோல்வியடைந்தார். இந்நிலையில், ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள் சிலர் அரசாங்கத்துக்குள் இருந்துகொண்டே, அவ்வாறான பிழைகளை செய்துகொண்டு மற்றும் குறைபாடுகளுடன் செயற்பட்டார்கள் எனின், மக்கள் அதனை அனுமதிக்கமாட்டார்கள்” என்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதன்போது குறிப்பிட்டார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
2 hours ago