Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2018 மே 22 , பி.ப. 01:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
வி.நிரோஷினி
“நானும் மக்களுடன் இருக்கின்றேன். மக்களின் பிரச்சினைகள் எனக்குத் தெரியும், என்னிடமிருப்பது இரும்பு இதயமல்ல. உங்களின் குற்றச்சாட்டுகளை கேட்கின்றபோது என்னுடைய இதயம் சூடாகி உருகுகின்றது” என்று சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்தார்.
அனர்த்த நிலைமைகள் தொடர்பில், நாடாளுமன்றத்தில், விவாதத்தை நடத்துமாறு ஒன்றிணைந்த எதிரணி கோரிக்கையை அடுத்து, சபையில் இருதரப்பினருக்கும் இடையில் கடுமையான வாக்குவாதங்கள் இடம்பெற்றன.
இதன்போது குறுக்கிட்ட ஒன்றிணைந்த எதிரணியின் எம்.பியான தினேஷ் குணவர்தன, “மக்களின் பிரச்சினை சட்டமூலம் அல்ல. மண்ணெண்ணெய் பிரச்சினையே மக்களின் பிரச்சினையாகும். ஆகையால், இன்றைய நாளுக்கு உரித்தான கடமைகளை ஒத்திவைத்துவிட்டு, விவாதத்துக்கு இடமளிக்க வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்.
அதற்கு, சபாநாயகர் இடமளிக்கவில்லை. தன்னுடைய தீர்மானத்தை மணித்தியாலத்துக்கு மணித்தியாலம் மாற்றமுடியாது. எடுத்த முடிவையும் மாற்றமுடியாது எனக் கூறினார்.
இதன்போது, மக்களின் பிரச்சினைகள் உங்களுக்குத் தெரியாதென, சபாநாயகரை பார்த்து, தினேஷ் குணவர்தன எம்.பி தெரிவித்துவிட்டார். அதற்கு பதிலளிக்கும் வகையிலேயே சபாநாயகர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
22 minute ago
29 minute ago