Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 14, புதன்கிழமை
Freelancer / 2022 ஜூலை 17 , பி.ப. 06:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (சிபெட்கோ) மற்றும் லங்கா ஐஓசி ஆகியவை எரிபொருள் விலையை இன்று இரவு 10 மணிமுதல் குறைக்கவுள்ளதாக அறிவித்துள்ளன.
பெற்றோல் மற்றும் டீசல் விலையை 20 ரூபாயாலும் 95 ஒக்டேன் பெற்றோல் மற்றும் சுப்பர் டீசலின் விலை 10 ரூபாயாலும் குறைக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சிபெட்கோ புதிய விலைகள்
பெற்றோல் 92 ஒக்டேன் - ரூ. 450/-
பெற்றோல் 95 ஒக்டேன் - ரூ. 540/-
டீசல் - ரூ. 440/-
சுப்பர் டீசல் - ரூ. 510/-
புதிய எரிபொருள் பாஸ் முறையின்படி ஜூலை 21 முதல் எரிபொருள் விநியோகம் செய்யப்படும் என்று கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
http://fuelpass.gov.lk/ என்ற இணையத்தில் தங்களுடைய விவரங்களைப் பதிவு செய்யுமாறு பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.
ஐஓசியும் விலையை குறைத்தது
லங்கா ஐஓசி நிறுவனமும் இன்று இரவு 10 மணி முதல் எரிபொருள் விலைகளை குறைக்கவுள்ளதாக அறிவித்துள்ளது.
புதிய விலைகள்
பெற்றோல் ஒக்டேன் 92 - ரூ 450
பெற்றோல் ஒக்டேன் 95 - ரூ 540
ஓட்டோ டீசல் - ரூ 440
சுப்பர் டீசல் - ரூ 510
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
58 minute ago
2 hours ago