2025 மே 07, புதன்கிழமை

ஐந்து நாட்களுக்கு காத்தான்குடி முடக்கம்

S. Shivany   / 2020 டிசெம்பர் 31 , மு.ப. 09:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரீ.எல்.ஜவ்பர்கான்,  வ.சக்தி, ஏ.எச்.ஏ. ஹுஸைன், வா.கிருஸ்ணா, எம்.எஸ்.எம்.நூர்தீன், கனகராசா சரவணன்

காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவு இன்று(31) முதல் எதிர்வரும் ஐந்து தினங்களுக்கு முடக்கப்பட்டுள்ளதாக,  மட்டக்களப்பு மாவட்ட  அரசாங்க அதிபர் கே. கருனாகரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு நகர் பகுதியில் உள்ள வர்த்தக நிலையங்களில் கடமையாற்றும் ஊழியர்கள் மற்றும் உரிமையாளர் களுக்கு நேற்று(30) மேற்கொள்ளப்பட்ட 549 ரபிட் அன்டிஜன் பரிசோதனையின்போது, 26 பேர் கொரோனா தொற்றாளர்களாக கண்டறியப்பட்டுள்ளனர்.

இவர்களில் காத்தான்குடி பிரதேசத்தைச் சேர்ந்த 23 நபர்களும், ஆரையம்பதி பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரும்,  மட்டக்களப்பு பிரதேசத்தைச் சேர்ந்த இருவரும் இனங்காணப்பட்டுள்ளனர்.

மேலும் காத்தான்குடி பிரதேசத்தின் பல பாகங்களிலும் மேற்கொள்ளப்பட்ட 665 ரபிட் அன்டிஜன் பரிசோதனைகளின்போது 27 நபர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X