2025 மே 14, புதன்கிழமை

ஐவருக்கு எதிரான பிடியாணைக்கு தடை உத்தரவு

Editorial   / 2020 ஓகஸ்ட் 25 , மு.ப. 10:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

குருநாகல் நகரசபை மேயர் உள்ளிட்ட ஐவரை கைதுசெய்யுமாறு பிறப்பிக்கப்பட்ட பிடியாணையை நடைமுறைப்படுத்துவதை இடைநிறுத்துமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அரச சபை கட்டிடம் உடைக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் குருநாகல் நீதவான் நீதிமன்றத்தால் இந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது.

முன்னதாக, குருநாகல் மேயர் உள்ளிட்ட 5 பேரை கைதுசெய்வதற்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையுத்தரவு இன்று (25) வரை நீட்டிக்கப்பட்டது.

அவர்களை கைதுசெய்வதற்கு நேற்று (24) வரை  மேன்முறையீட்டு நீதிமன்றம், இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்திருந்தது.

தனக்கு எதிராக பிறப்பிக்கப்பட்டுள்ள பிடியாணை உத்தரவை ரத்துச் செய்யுமாறு கோரிக்கை விடுத்து, குருநாகல் நகர மேயர் மேன்முறையீட்டு நீதிமன்றில் ரிட் மனுவொன்றை தாக்கல் செய்திருந்தார்.

குருநாகல் புவனேகபாகு அரச சபை கட்டிடம் உடைக்கப்பட்ட சம்பவம் தொடர்பில்  நகர மேயர், நகர சபை ஆணையாளர் மற்றும் நகரசபையின் பிரதான பொறியியலாளர் உட்பட ஐவருக்கு எதிராக குருநாகல் நீதவான் நீதிமன்றால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டது.

சட்டமா அதிபரின் அறிவுறுத்தலின் படி பதில் பொலிஸ்மா அதிபரினால் குறித்த பிடியாணை உத்தரவு பெற்றுக்கொள்ளப்பட்டிருந்தது.

குருநாகல் நகர மேயர் துஷார சஞ்ஜீவ விதாரண, நகர ஆணையாளர் பிரதீப் நிஷாந்த திலகரட்ண, நகரசபை பொறியியலாளர் ஷமிந்த பண்டார அதிகாரி உட்பட ஐவரை உடனடியாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு குருநாகல் நீதவான் நீதிமன்றம் கடந்த 7 ஆம் திகதி பிடியாணை பிறப்பித்திருந்தார்.

இந்த நிலையில், குறித்த பிடியாணையை நடைமுறைப்படுத்த இடைக்கால தடையுத்தரவு இன்று (25) பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .