Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 ஜூன் 03 , பி.ப. 01:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நிறைவேற்று சபை மற்றும் அகில இலங்கை செயற்குழு ஆகியன ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று (03) முற்பகல் கொழும்பு அபேகம வளாகத்தில் கூடியது.
கட்சியின் எதிர்கால நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக புதிய நிர்வாக குழு இதன்போது தெரிவு செய்யப்பட்டது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் ஜனாதிபதிகள் மற்றும் பிரதமர்கள் கட்சியின் ஆலோசகர்களாக தெரிவு செய்யப்பட்டனர்.
அந்த வகையில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, முன்னாள் பிரதமர் டி.எம்.ஜயரட்ன ஆகியோர் கட்சியின் ஆலோசனைக் குழுவாக தெரிவு செய்யப்பட்டனர்.
கட்சியின் தலைவராக மீண்டும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
கட்சியின் பொதுச் செயலாளராக பேராசியர் ரோஹன லக்ஷமன் பியதாச தெரிவுசெய்யப்பட்டார்.
கட்சியின் தேசிய அமைப்பாளராக அமைச்சர் துமிந்த திஸாநாயக்கவும் பொருளாளராக நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.திஸாநாயக்கவும் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
கட்சியின் சிரேஷ்ட உப தலைவர்களாக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, அமைச்சர் டபிள்யு.டி.ஜே.செனெவிரத்ன, அநுர பிரியதர்ஷன யாப்பா, சுசில் பிரேமஜயந்த ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.
மேலும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உப தலைவர்களாக ஏ.எச்.எம்.பௌசி, சரத் அமுனுகம, மஹிந்த அமரவீர, தயாசிறி ஜயசேகர, ரெஜினோல்ட் குரே, பியசேன கமகே, விஜித் விஜயமுனித டி சொயிஸா, மஹிந்த சமரசிங்ஹ, டிலான் பெரேரா, தென் மாகாண முதலமைச்சர் சான் விஜயலால் டி சில்வா, நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
புதிய உப செயலாளர்களாக அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய, மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏகநாயக்க, வடமேல் மாகாண முதலமைச்சர் தர்மசிறி தஸநாயக்க, மேல் மாகாண முதலமைச்சர் இசுரு தேவப்பிரிய, ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் தஸநாயக்க, பிரதியமைச்சர் லசந்த அழகியவன்ன, முன்னாள் பிரதியமைச்சர் சுதர்ஷனீ பெர்ணான்டோபுள்ளே, சுமேதா ஜீ.ஜயசேன ஆகியோர் தெரிவுசெய்யப்பட்டனர்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தற்போதுள்ள அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் மத்திய செயற்குழு உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்டனர்.
மேலும் மத்திய குழுவிற்கு தெரிவு செய்யப்படும் ஏனைய நியமனங்கள் கட்சியின் தலைவரினால் மேற்கொள்ளப்படவுள்ளன.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யாப்புக்கு ஏற்ப நியமிக்கப்பட வேண்டியுள்ள அமைப்பாளர்கள், தொழில் வல்லுனர்கள், கலைஞர்கள் உள்ளிட்ட தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு அமைப்புகளை எதிர்காலத்தில் நியமிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
2 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago