2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

கைவிடப்பட்டுள்ள பணிப்புறக்கணிப்பு

Editorial   / 2017 டிசெம்பர் 13 , மு.ப. 11:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடந்த 7 நாட்களாக பணிப்புறக்கணிப்பை மேற்கொண்டு வந்த புகையிரத தொழிற்சங்கம் தமது பணிப்புறக்கணிப்பை கைவிடுவதாக அறிவித்துள்ளது.

நேற்று(12) நியமிக்கப்பட்ட அமைச்சரவை உப குழுவுக்கும்,குறித்த தொழிற்சங்கங்களுக்கும் இடையில் இன்று(13) இடம்பெற்ற கலந்துரையாடலையடுத்தே இவர்கள் பணிப்புறக்கணிப்பை கைவிட்டுள்ளதாக உப குழுவின் உறுப்பினர் அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய தமது கோரிக்கைகளை அமைச்சரவையில் சமர்ப்பிப்பதாக குறித்த உபகுழு வாக்குறுதி வழங்கியமைக்கு அமைவாக தமது பணிப்புறக்கணிப்பை கைவிடுவதாக புகையிரத சாரதிகளின் சங்கத்தின் பிரதான செயலாளர் இந்திக தொடங்கொட தெரிவித்துள்ளார்.

எனவே பணியாளர்கள் அனைவரும் இன்று கடமைக்குத் திரும்புமாறும்,இவர்கள் அனைவரும் பணிக்குத் திரும்பிய பின்னர் நாளை(14) காலையிலிருந்து புகையிரத சேவைகள் வழமைப்போல் இடம்பெறும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X