2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

கொரோனாவால் இலங்கையில் 12ஆவது மரணம் பதிவானது

Editorial   / 2020 ஓகஸ்ட் 23 , மு.ப. 08:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவில் இருந்து நாடு திரும்பிய பெண் ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக நேற்று உயிரிழந்துள்ளார்.

ஐ.டி. எச்.இல் சிகிச்சை பெற்று வந்த 47 வயதான பெண் ஒருவரே உயிரிழந்தாாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக 12 மரணங்கள் பதிவாகியுள்ளன.

உயிரிழந்தவர் புற்று நோய், இருதய மற்றும் நீரிழவு போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, நாட்டில் நேற்றைய தினம் 6 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

குவைத் மற்றும் சென்னையில் இருந்து நாடு திரும்பிய தலா 2 பேரும் அதில் அடங்குவதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X