2025 மே 07, புதன்கிழமை

கொழும்பில் 6 வீட்டுத் தொகுதிகள் விடுவிப்பு

Editorial   / 2020 டிசெம்பர் 12 , மு.ப. 08:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த குடியிருப்பு தொகுதிகளில் சில, இன்று (12) முதல் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.

இன்று காலை 6 மணி முதல் அந்த குடியிருப்புத் தொகுதிகள் விடுவிக்கப்பட்டுள்ளன என லெப்டினன் ஜெனரல் இராணுவத்தளபதி ஷ​வேந்திர சில்வா அறிவித்துள்ளார்.

அதன்பிரகாரம்.

மட்டக்குளிய ரந்திய உயன

முகத்துவாரம் (மோதர) மென்சத உயன

முகத்துவாரம் (மோதர) மிஹிஜய ​செவன

கிராண்ட்பாஸ் முவதொர உயன

கிராண்ட்பாஸ் சமஹிபுர

தெமட்டகொட மிஹது சென்புர உயன

அந்த வீட்டுத் தொகுதியில் வாழும் மக்களிடத்தில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையின் பெறுபேறுகளின் அடிப்படையில் இந்தத் தீர்மானத்தை எடுத்ததாக  கொவிட்-19 தொற்றொழிப்பு தேசிய மத்திய நிலையத்தின் பிரதானியான இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X