2025 ஜூலை 21, திங்கட்கிழமை

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் 'நவோதயா கிருஷ்ணா' சுட்டுக்கொலை

Editorial   / 2018 ஜூலை 09 , மு.ப. 09:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு மாநகர சபை உறுப்பினரும் நவோதய மக்கள் முன்னணியின் தலைவருமான கிருஷ்ணபிள்ளை கிருபாணந்தன், இனந்தெரியாத நபர்களினால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

இந்தத் துப்பாக்கிப் பிரயோகம், கொழும்பு-13, செட்டியார்த் தெருவில், இன்றுக் காலை 7:45 மணிக்கு இடம்பெற்றுள்ளது.

இவர், மாநகர சபைக்கான தேர்தலில்,சுயேட்சைக்குழுவில் போட்டியிட்டு வெற்றியீட்டியவராவார்.

இதேவேளை, கொழும்பு, ஜம்பட்டா தெருவில், நேற்றிரவு (08) மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவமொன்றில், இருவர் கொல்லப்பட்டதோடு, மேலுமிருவர் காயமடைந்தனர் என, பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று இரவு 8.15 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவத்தில் உயிரிழந்தவர்களில் ஒருவர் 58 வயதுடைய ஆண் எனவும் மற்றையவர் 50 பெண் எனவும், பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .