2025 மே 14, புதன்கிழமை

சீரற்ற வானிலையால் 65,316 பேர் பாதிப்பு

Editorial   / 2019 டிசெம்பர் 23 , மு.ப. 10:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டில் கடந்த சில நாட்களாக நிலவும் சீரற்ற வானிலை காரணமாக 19,072 குடும்பங்களைச் சேர்ந்த 65,316 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இன்று (23) காலை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாணத்தில் 10,105 குடும்பங்களைச் சேர்ந்த 33,591 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், மட்டக்களப்பு மாவட்டத்தில் 4,920  குடும்பங்களைச் சேர்ந்த 16,755 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன், அம்பாறை மாவட்டத்தில் 5,185 குடும்பங்களைச் சேர்ந்த 16,836 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, ஊவா மாகாணத்தில் 1,623 குடும்பங்களைச் சேர்ந்த 5,915 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், மத்திய மாகாணத்தில் 696 குடும்பங்களைச் சேர்ந்த 2,359 பேர் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .