Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 ஏப்ரல் 14 , மு.ப. 06:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
சித்திரை மாத புதுவருடப் பிறப்பு தினமாகிய இன்று (14) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இலங்கைவாழ் மக்கள் அனைவருக்கும் தனது புத்தாண்டு நல்வாழ்த்துக்களைப் பகிர்ந்துள்ளார்.
“சிங்கள – தமிழ் புத்தாண்டின் மூலமாக, கீழைத்தேச வாசிகளாக எம்முடைய உயரிய பண்பாடே வெளிப்பட்டு நிற்கின்றது. அந்நியோன்னிய பிணைப்பும் சமூகத் தொடர்பாடலும் வசந்த காலத்தில் மலரும் மலர்களைப் போல் மலர்கின்ற பண்டைய பழக்கவழக்கங்களுடன் பிணைந்த புத்தாண்டானது, தனிமனித சிந்தனையை முதன்மைப்படுத்தி எமது ஆழமான புரிந்துணர்வையும் புத்தாண்டின் மீது நாம் கொண்டுள்ள நன்மதிப்பையுமே, எதிர்காலத்தை நோக்கிக் கொண்டு செல்கின்றது என வாழ்த்தியுள்ளார்.
இயற்கைக்கும் மனிதனுக்கும் இடையில் தொன்றுதொட்டு இருந்துவருகின்ற இடைவிடா பிணைப்பும், மனிதனுள் இருக்கின்ற நன்றியுணர்வும் பற்றிய உணர்வுபூர்வமான அர்ப்பணிப்பினை புத்தாண்டு சம்பிரதாயங்கள் மூலமாக வெளிப்படுத்தலானது, எமது முன்னோர்கள் கொண்டிருந்த உன்னத பண்புகளையே பறைசாற்றுகின்றது. அத்தகைய உயரிய பண்பாட்டினை காலத்திற்கேற்ப புதுப்பிக்கும் வகையில் கொண்டாடப்படும் சிங்கள – தமிழ் புத்தாண்டு நம் நாட்டிலும் வெளிநாடுகளிலும் வாழ்ந்து வருகின்ற இலங்கையர்களுக்கு சமாதானமும் சௌபாக்கியமும் மிக்க இனிய புத்தாண்டாக அமைய வேண்டுமென்று எனது நல்வாழ்த்துக்களை தெரிவித்துகொள்கின்றேன்” என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
6 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
8 hours ago