2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

ஜனாதிபதி- பிரதமருக்கிடையில் கலந்துரையாடல்

Editorial   / 2018 மார்ச் 30 , பி.ப. 12:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோருக்கடையில், நேற்று (29) இரவு நீண்ட நேர கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்தக் கலந்துரையாடல் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவின் உத்தியோகப்பூர்வ இல்லத்தில் இடம்பெற்றுள்ளது.

இதன்போது, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக ஒன்றிணைந்த எதிரணி சமர்ப்பித்துள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையை அரசு என்ற அடிப்படையில் எவ்வாறு எதிர்நோக்குவது என்பது தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு பின்னர் இரு கட்சிகளும் ஒன்றிணைந்து அரசாங்கத்தை தொடர்ந்து ஆட்சி செய்வது தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளதாக, தெரிவிக்கப்படுகிறது.

குறித்த கலந்துரையாடல் சுமார் 4 மணிநேரம் இடம்பெற்றதாகவும், இரவு 11.30 மணியளவில் இது நிறைவுப்பெற்றதாவும் தெரிவிக்கப்படுகிறது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .