2025 டிசெம்பர் 26, வெள்ளிக்கிழமை

டக்லஸ் தேவானந்தா சற்று முன் கைது

Freelancer   / 2025 டிசெம்பர் 26 , பி.ப. 07:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா குற்றப்புலனாய்வு திணைக்களத்தால் கைது செய்யப்பட்டுள்ளார். 

2001 ஆம் ஆண்டு இராணுவத்தால் அவரது தனிப்பட்ட பயன்பாட்டிற்காக வழங்கப்பட்ட துப்பாக்கி, 2019 ஆம் ஆண்டு திட்டமிடப்பட்ட குற்றவாளியான மாகந்துரே மதுஷிடம் கண்டுபிடிக்கப்பட்டது.

குறித்த துப்பாக்கியின் இலக்கங்களைப் பரிசோதித்த போது, அது டக்ளஸ் தேவானந்தாவிற்கு வழங்கப்பட்ட துப்பாக்கி என்பது கண்டறியப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக அவரிடம் நடத்தப்பட்ட விசாரணைகளில், அந்தத் துப்பாக்கி எவ்வாறு காணாமல் போனது என்பது குறித்து விளக்கம் அளிக்க அவர் தவறியுள்ள காரணத்தால் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

R

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X