Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 14, புதன்கிழமை
Editorial / 2019 டிசெம்பர் 23 , பி.ப. 11:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில், வெளிநாட்டவர்களை ஏற்றிச் வான், லொறி ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளானதில், மூன்று இந்தியப் பிரஜைகள் உள்ளிட்ட நால்வர் பலியாகியுள்ளனர்.
குறித்த வானை செலுத்திச் சென்ற வான் சாரதியும் அவருடன் வந்த மூன்று இந்தியர்களுமே, இந்த விபத்தில் பலியாகியுள்ளனர். இதேவேளை, இந்த விபத்தில் படுகாயமடைந்த மூன்று இந்தியர்கள், படுகாயமடைந்த நிலையில், நாகொடை எல்பிட்டிய ஆகிய வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மாத்தறையிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்த குறித்த வான், தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் வெலிப்பன - குருந்துகஹஹெக்ம பகுதியில் இன்று (23), இரவு விபத்துக்குள்ளாகியுள்ளது.
6 இந்தியர்களை ஏற்றிக்கொண்டு வான் முன்னால் சென்றுக்கொண்டிருந்த லொறி ஒன்றின் பின் பக்கத்தில் மோதியதாலேயே, இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
வானின் சாரதி ஏற்பட்ட நித்திரையே இந்த விபத்துக்குக் காரணம் என்றும் இது தொடர்புடைய விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago