2025 மே 14, புதன்கிழமை

தேரரின் போராட்டம் கைவிடப்பட்டது

Editorial   / 2019 நவம்பர் 06 , மு.ப. 10:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

அமெரிக்காவுடனான MCC ஒப்பந்தத்துக்கு எதிராக உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்த உடுதும்பர காசியப்ப தேரர் தனது போராட்டத்தை கைவிட்டுள்ளார்.

கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் உடுதும்பர காசியப்ப தேரர் நேற்று (05) குறித்த உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்திருந்தார்.

இந்த நிலையில், குறித்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட போவது இல்லை என பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச ஆகியோர் எழுத்து மூலம் வழங்கிய உறுதி மொழிக்கு அமையவே அவர் உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .