Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2017 நவம்பர் 25 , மு.ப. 10:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான பரிந்துரைகளை வழங்குவதற்காக, தேர்தல்கள் ஆணையாளர்கள் மஹிந்த தேஷப்பிரியவின் தலைமையில், இன்று (25) கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது.
இதற்கு முன்னார், தேர்தலுக்கான பரிந்துரைகள், 27ஆம் திகதியே அறிவிக்கப்படும் என்று, ஆணையாளர் அறிவித்திருந்தார்.
எவ்வாறாயினும், உள்ளூராட்சி மன்றங்களுக்கான எல்லைகள் மற்றும் உறுப்பினர்களின் எண்ணிக்கையைத் தீர்மானித்து வெளியிடப்பட்டிருந்த அதிவிசேட வர்த்தமானிக்கு, எதிர்வரும் 04ஆம் திகதி வரையிலும், மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்காலத் தடையுத்தரவைப் பிறப்பித்துள்ளது.
2017ஆம் ஆண்டு பெப்ரவரி 17ஆம் திகதியன்று வெளியிடப்பட்டிருந்த அந்த அதிவிசேட வர்த்தமானிக்கு எதிராக, வாக்காளர்கள் அறுவரினால், ரிட்-மனுக்கள் தாக்கல் செ ய்யப்பட்டிருந்ததையடுத்தே, மேற்கண்ட உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது,
எனவே, மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பு தொடர்பிலும், இன்று நடைபெறவுள்ள கூட்டத்தில் கவனம் செலுத்தப்படவுள்ளது.
இதேவேளை, மாகாணசபைகள் தேர்தலை நடத்துதல் தொடர்பான, கட்சித் தலைவர்களுக்கிடையேயான கலந்துரையாடலும், நேற்று (24) மாலை இடம்பெற்றிருந்தது. எனினும், இந்தக் கலந்துரையாடலின் போது, எந்தவொரு தீர்மானமும் மேற்கொள்ளப்படவில்லை என்று தெரியவருகின்றது.
21 Jul 2025
21 Jul 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 Jul 2025
21 Jul 2025