Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 15, வியாழக்கிழமை
J.A. George / 2019 ஜூலை 23 , மு.ப. 11:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
மெகசின் சிறைச்சாலையில் சாகும்வரையான உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டிருந்த அரசியல் கைதியான தேவதாசனின் உண்ணாவிரதம் நிறைவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
இன்னும் இரண்டு வாரங்களில் அமைச்சரவை பத்திரத்தை தாக்கல் செய்வதாக அமைச்சர் மனோ கணேசன், நேரில் சந்தித்து உறுதிமொழி வழங்கியதை அடுத்து, அவர் நீராகாரம் அருந்தி உண்ணாவிரதத்தை நிறைவு செய்து கொண்டுள்ளார்.
தமிழ் அரசியல் கைதியான கணகசபை தேவதாசன் கடந்த சில தினங்களாக புதிய மெகசின் சிறைச்சாலைக்குள் சாகும்வரையான உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்தார்.
நீண்ட காலமாக சிறை வைக்கப்பட்டுள்ள தனக்கு பிணை வழங்குமாறு கோரி அவர் இந்த போராட்டத்தை முன்னெடுத்திருந்தார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், கவிந்தன் கோடிஸ்வரன் ஆகியோரும் ஜனநாயக மக்கள் முன்னணி சார்பில் அமைச்சர் மனோ கணேசன் தலைமையில் அக்கட்சியின் தேசிய அமைப்பாளர் வி.ஜனகன், மேல்மாகாண சபை உறுப்பினர் பாஸ்கரன் மற்றும் விஷ்ணுகாந்தன் ஆகியோரும் அங்கு சென்று அவரை சந்தித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
50 minute ago
14 May 2025
14 May 2025
14 May 2025