Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2020 ஜனவரி 22 , பி.ப. 01:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஐக்கிய தேசிய கட்சியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் ஜயம்பதி விக்ரமரத்ன தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
அவர், தனது இராஜினாமா கடிதத்தை சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் ஒப்படைத்துள்ளதாக பிரதி சபாநாயகர் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றம் இன்று (22) பிற்பகல் கூடிய போது, பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி இந்த விடயத்தை சபைக்கு அறிவித்தார்.
ஜனாதிபதி சட்டத்தரணியான ஜயம்பதி விக்கிரமரத்ன 2015ஆம் ஆண்டு இடம்பெற்ற பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டிருந்தார்.
நாடாளுமன்ற தெரிவுக்குழுக்களில் அங்கம் வகித்த அவர், கடந்த வருடம் ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி இடம்பெற்ற தாக்குதல் தொடர்பான நாடாளுமன்ற விசேட தெரிவுக்குழுவில் அங்கம் வகித்திருந்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .