2025 மே 19, திங்கட்கிழமை

’மதத்துடன் அரசியல் செய்யாதீர்கள்’

Editorial   / 2017 ஜூலை 12 , பி.ப. 01:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

விகாரைகளைக் கட்டுப்படுத்துவதற்கோ அல்லது விகாரை நடவடிக்கைகளில் தலையிடவோ, தனக்கு எந்தவொரு அதிகாரமும் இல்லை என்று, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

 

இளம் பிக்குமார் ஒன்றியத்தைச் சேர்ந்த பிக்குகளை, அலரி மாளிகையின் இன்று (12) காலை சந்தித்துக் கலந்துரையாடிய போதே, பிரமர் மேற்கண்டவாறு கூறினார்.

 

இது குறித்து தொடர்ந்துரைத்த அவர், 'இந்த விளையாட்டை நிறுத்துங்கள். மதத்தை இழுக்காதீர்கள். நாங்களும் பௌத்தர்கள் தான். எங்களாலும் எதையும் சொல்ல முடியும். மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதியாக்கவே, பௌத்தர்கள் பலர் வாக்களித்தார்கள். மதத்துடன் அரசியல் நடத்தாதீர்கள். இது, உள்ளூராட்சிமன்றத் தேர்தலுக்குத் தயாராவதற்காகச் செய்யும் சதித்திட்டமாகும்' என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X