2025 மே 13, செவ்வாய்க்கிழமை

முகமாலையில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி இளைஞர் பலி

Editorial   / 2020 ஜூன் 20 , பி.ப. 09:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜே.ஏ.ஜோர்ஜ், எம்.றொசாந்த்

கிளிநொச்சி முகமாலை பகுதியில், இராணுவத்தினரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி 24 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவம் இன்று மாலை 6.15 மணியளவில் இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்பட்டது.

சம்பவத்தில், கெற்பெலியைச் சேர்ந்த திரவியம் இராமலிங்கம் இளைஞனே உயிரிழந்தார்.

சட்டவிரோத மணல் அகழ்வின்போது இந்த சம்பவம் இடம்பெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதேவேளை, இந்த சம்பவம் தொடர்பில் கேட்டபோது, நபர் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக தகவல் கிடைத்ததாக, இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் சந்தன விக்ரமசிங்க, தமிழ்மிரருக்கு தெரிவித்தார்.

இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X