Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 14, புதன்கிழமை
Editorial / 2019 டிசெம்பர் 20 , பி.ப. 12:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ராஜித சேனாரத்ன, தனக்கு முன்பிணை வழங்குமாறு விடுத்த மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு நீதவான் நீதிமன்றம் அவரது முன்பிணை கோரிக்கையை நிராகரித்துள்ளது.
குற்றப்புலனாய்வு பிரிவினர் தன்னை கைது செய்வதை தவிர்த்துக்கொள்ளும் வகையில், முன் பிணை கோரி மனு ஒன்றை நேற்று (19) தாக்கல் செய்திருந்தார்.
குறித்த பிணை மனு மீதான வழக்கு விசாரணைக்காக இன்று (20) அவர் கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜராகியிருந்தார்.
கடந்த ஜனாதிபதி தேர்தல் காலத்தில் நடத்திய வெள்ளை வான் பற்றிய ஊடகவியலாளர் சந்திப்பு தொடர்பில் தன்னை கைது செய்வதற்காக குற்றப்புலனாய்வு பொலிஸார் தயாராகி வருவதால் முன்பிணை வழங்குமாறு அவர் கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .