Editorial / 2020 மே 13 , பி.ப. 07:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
UPDATE : 10.50PM கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன, நீர்கொழும்பில் உள்ள பல்லன்சேன தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்துக்கு அழைத்துவரப்பட்டுள்ளார்.
கொவிட் 19 வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் கைது செய்யப்பட்ட அனைவரும் இவ்வாறு தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களுக்கு அனுப்பிவைக்கப்படுவதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
14 நாட்களுக்கு நிறைவடைந்ததும் இவர்கள் மருத்துவ பரிசோதனைகளின் பின்னர், சிறைச்சாலைகளுக்கு அனுப்பப்படுதவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் சரணடைந்ததையடுத்து, சற்று முன்னர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இதற்கமைய அவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வௌ்ளை வேன் சம்பவம் தொடர்பில் முன்னாள் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவிற்கு நீதவான் நீதிமன்றத்தால் கடந்த டிசெம்பர் 30 ஆம் திகதி வழங்கப்பட்ட பிணை உத்தரவு கொழும்பு மேல் நீதிமன்றத்தால் இன்று (13) இரத்து செய்யப்பட்டது.
மேல் நீதிமன்ற நீதிபதி மஞ்சுள திலகரட்ணவினால் பிணை உத்தரவு இரத்து செய்யப்பட்டிருந்தது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .