2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

'விவரங்களை வெளியிடுமாறு படையினருக்கு உத்தரவிடுவேன்’

George   / 2017 ஜூன் 12 , பி.ப. 06:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.நிதர்ஷன்

இறுதி யுத்தம் மற்றும் இதுவரை காலமும், பாதுகாப்புப் படையினரிடம் சரணடைந்த மற்றும் பாதுகாப்புத் தரப்பினரால் கைது செய்யப்பட்டவர்களின் விவரங்களை, உடனடியாக வெளியிடுமாறு, முப்படையினருக்கு உத்தரவிடப்போவதாகத்  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

இதன் மூலம், வடக்கு, கிழக்கின் 8 மாவட்டங்களிலிருந்தும் காணாமலாக்கப்பட்டோர் தொடர்பில் தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடியும் என்றும் ஜனாதிபதி கூறினார்.

யாழ்ப்பாணத்துக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி, யாழ். மாவட்டச் செயலகம் மற்றும் வடமாகாண ஆளுநர் அலுவலகம் ஆகியவற்றில், இது தொடர்பான கலந்துரையாடல்களையும் இன்று மேற்கொண்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X