Freelancer / 2024 நவம்பர் 26 , பி.ப. 09:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
புதிய இணைப்பு
நிந்தவூர் மத்ரசா பாடசாலையில் இருந்து வீடுகளுக்கு உழவு இயந்திரத்தில் சென்று கொண்டிருந்த 5 மாணவர்கள் வெள்ளத்தில் இருந்து காப்பாற்றப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதலாம் இணைப்பு
காரைத்தீவு பகுதியில்மத்ரசா பாடசாலை முடிந்து உழவு இயந்திரத்தில் வீடு திரும்பிக்கொண்டிருந்த 5 மாணவர்கள் உள்ளிட்ட 7 பேர் வௌ்ளத்தில் சிக்கி காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
9 மாணவர்களும் உழவு இயந்திர சாரதி மற்றும் உதவியாளரும் பயணித்துக்கொண்டிருந்த தருணத்தில் உழவு இயந்திரம் வௌ்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளது.
பின்னர், நீரில் மூழ்கிய 2 மாணவர்கள் மீட்கப்பட்டதோடு, ஏனைய 7 பேரும் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளனர்.
காணாமல் போன மாணவர்கள் அனைவரும் 12-16 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என தெரியவருகிறது. R
6 hours ago
25 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
25 Oct 2025