Editorial / 2020 டிசெம்பர் 23 , பி.ப. 08:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி மரணித்தோரின் எண்ணிக்கை 183ஆக அதிகரித்துள்ளது. அவர்களில் ஒருவர், கொழும்பு-7ஐச் சேர்ந்த 72 வயதான பெண் ஆவார். டிசெம்பர் 20ஆம் திகதியன்று, இவர் வீட்டிலேயே கொவிட் நிமோனியா காரணமாக உயிரிழந்துவிட்டார் என, அரசாங்கத் தகவல் திணைக்களம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மற்றையவர், மஹரகம அபே க்ஷா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த தங்கொட்டுவ பிரதேசத்தைச் சேர்ந்த 15 வயதான சிறுவன் ஆவார். கொவிட்-19 நோய் இனங்காணப்பட்டதன் பின்னர், ஐ.டி.எச் க்கு மாற்றப்பட்டார். அதன் பின்னர், டிசெம்பர் 22ஆம் திகதியன்று உயிரிழந்தார். நிமோனியா, இரத்தம் நஞ்சானமை, கடுமையான லுகேமியா நோய் ஆகியனவே, மரணத்துக்குக் காரணமென அறிவிக்கப்பட்டுள்ளது.
3 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
5 hours ago