Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2017 டிசெம்பர் 29 , மு.ப. 10:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள், நேற்று (28) அதிகாலை வெளியாகின.
பரீட்சைப் பெறுபேறுகளை www.doenets.lk என்ற இணையத்தளத்தின் ஊடாகப் பார்வையிடலாம் என்று, பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
பெறுபேறுகளின் பிரகாரம், பௌதீகவியல் பிரிவில் யாழ்ப்பாணம், பருத்தித்துறை ஹாட்லி கல்லூரி மாணவன் ஸ்ரீதரன் திவாகரன், அகில இலங்கை ரீதியில் முதலிடத்தைப் பெற்றுள்ளார்.
உயிரியல் விரிவில், மாத்தறை சுஜாதா வித்தியாலயத்தைச் சேர்ந்த திலினி சந்துனிகா பளிஹக்கார, முதலிடத்தைப் பெற்றுள்ளார்.
பொது விடயத்தானதுறையில் முதலிடத்தை, கொழும்பு தேவி பாலிகா கல்லூரி மாணவி ஹிருணி சாக்யா அபேதுங்க பெற்றுக்கொண்டுள்ளார்.
உயிரித்தொழில்நுட்பப் பிரிவில், இரத்தினபுரி சீவலி மகா வித்தியாலத்தைச் சேர்ந்த லக்ஷித சத்துரங்க மெதலக முதலிடத்தைப் பெற்றுக்கொண்டுள்ளார்.
பொறியற் தொழில்நுட்பப் பிரிவில், அகில இலங்கை ரீதியில் மாத்தறை மஹிந்த ராஜபக்ஷ வித்தியாலயத்தைச் சேர்ந்த ரத்சிறினி ஹெட்டியாராச்சி பெற்றுக்கொண்டுள்ளார்.
வணிகத்துறையில், மாத்தறை சுஜாதா மகளிர் கல்லூரின் மாணவியான துலானி ரன்திகா முதலிடத்தைப் பெற்றுக்கொண்டுள்ளார்.
கலைத் துறையில், அகில இலங்கை ரீதியில் இரத்தினபுரிய சத்தர்மாலங்கார பிரிவெனாவைச் சேர்ந்த வண. பத்பேரியே முனித்தவங்ச தேரர் பெற்றுக்கொண்டுள்ளார். உயர்த்தர கலைப்பிரிவில், அகில இலங்கை ரீதியில், தேரர் ஒருவர் முதலிடத்தைப் பெற்றுள்ளார். இதில், விசேடம் என்னவெனில், தேரர் ஒருவர் முதல்தடவையாக முதலிடத்தைப் பெற்றுள்ளார்.
உடன் அழைக்கவும்
உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் தொடர்பான விவரங்களை அறிந்து கொள்ளவேண்டுமாயின், பின்வரும் தொலைபேசி இலக்கங்கள் மூலம் கேட்டறிந்துகொள்ளமுடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பாடசாலை பரீட்சை ஏற்பாடு மற்றும் பெறுபேறுக் கிளை 0112-784208/ 0112-784537/ 0113-188350/ 0113-140314 அல்லது அவசரத் தொலைபேசி இலக்கம் 1911க்கும் அழைப்பை ஏற்படுத்தி அறிந்துகொள்ளவும்.
163,104 பேர் தகுதி
இந்தப் பரீட்சையில் தோற்றிய மாணவர்களில், 163,104 பேர் பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பிப்பதற்குத் தகுதி பெற்றுள்ளனர் என்றும் பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
கடந்த முறை பரீட்சைக்கு 2,37,943 பேர் தோற்றினர். அதில், 77,284 பேர் தனிப்பட்ட பரீட்சார்த்திகள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
205 இடைநிறுத்தம்
2017ஆம் ஆண்டு க.பொ.த உயர்தரப்பரீட்சைக்குத் தோற்றிய பரீட்சார்த்திகளில் 205 பேரின் பெறுபேறுகள் இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளவென, பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித்த தெரிவித்தார்.
மீள் ஆய்வுக்கு திகதி குறிப்பு
வெளியாகியுள்ள உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளை மீள் ஆய்வு செய்வதற்கான விண்ணப்பங்களை, 2018ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 15ஆம் திகதிக்கு முன்னர் அனுப்பிவைக்குமாறு, பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
23 minute ago
28 minute ago
21 Jul 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
28 minute ago
21 Jul 2025