2025 ஜூலை 21, திங்கட்கிழமை

8 மாத சிசு கடத்தல்

Editorial   / 2018 மே 31 , பி.ப. 12:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

வீட்டுக்குள் பலவந்தமாக நுழைந்த எட்டுப்பேர் அடங்கிய இனந்தெரியாத குழுவொன்று, வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த 8 மாதங்களேயான சிசுவைக் கடத்திச் சென்றுள்ளது.

இந்தச் சம்பவம் வவுனியா, குட்ஷெட் வீதியில், முதலாவது குறுக்கு தெருவிலுள்ள வீடொன்றிலேயே இன்று (31) அதிகாலை இடம்பெற்றுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வானில் வந்தவர்களே சிசுவைக் கடத்திக்கொண்டு தப்பிச்சென்றுவிட்டனர் என, பெற்றோர் செய்துள்ள முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வசுதரன் வானிஷன் என்ற சிசுவையே இனந்தெரியாத நபர்கள் கடத்திச்சென்றுள்ளனர் என்றும் தெரிவித்த பொலிஸார், சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகவும் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .