Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 01, வியாழக்கிழமை
Mayu / 2024 டிசெம்பர் 09 , பி.ப. 04:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
மாவடிப்பள்ளி வெள்ள அனர்த்தத்தில் உயிர் நீத்த உறவுகளுக்கான சர்வமத ஆத்ம சாந்தி பிரார்த்தனை, காரைதீவு கண்ணகி அம்மன் ஆலய முச்சந்தியில் தலைவர் சிவஸ்ரீ க.வி.பிரவீன் தலைமையில் கிழக்கிலங்கை சொற்பொழிவாளர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் ஞாயிற்றுக்கிழமை(08) மாலை நடைபெற்றது.
இனம், மதம், மொழி களுக்கு அப்பால் மனிதநேயமும் அன்புமே உடையவர்களாக நல்லிணக்கத்தோடு எதிர்கால சந்ததியைப் கட்டியெழுப்புவதற்காக நடைபெற்ற நிகழ்வானது சர்வமத தலைவர்களின் பிரார்த்தனையோடு ஆரம்பமானது.
பின்னர் அதிதிகள் உரையை தொடர்ந்து அனைவரும் இணைந்து அனர்த்தத்தின் போது உயிர் நீத்த உறவுகளின் ஆத்மா சாந்தி அடையவும் எதிர்காலத்தில் இவ்வாறான அனர்த்தங்கள் இடம்பெறாமல் பாதுகாக்கவும் அகல் விளக்குகளில் தீபச்சுடரேந்தி பிரார்த்தனைகள் இடம்பெற்றதோடு உயிர்களை காக்க களப்பணி செய்த வீரர்களும் நினைவு கூரப்பட்டனர்.
இந்நிகழ்வில் சர்வ மத மதகுருமார்கள், அம்பாறை மாவட்ட தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் அபூபக்கர் ஆதம்பாவா, அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் சிந்தக அபேவர்த்தன, மேலதிக அரசாங்க அதிபர் சிவ ஜெகராஜன், கல்முனை ஆதார வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் ஜீ. சுகுணன், திடீர் மரண விசாரணை அதிகாரி அப்துல் ஹமீட் அல் ஜவாஹீர், மாவட்ட கலாசார உத்தியோகத்தர் ஜெயராஜ், முன்னாள் அரசாங்க அதிபர்கள், காரைதீவு பொலிஸ் நிலைய உதவி பொறுப்பதிகாரி உபுல் சாணக, ஆலய பரிபாலன சபையினர், இந்து மாமன்ற உறுப்பினர்கள், உலமா சபைகளின் நிர்வாகிகள், ராவணா அமைப்பினர், உயிர் நீத்த உறவுகளின் பெற்றோர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
பாறுக் ஷிஹான்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
28 minute ago
32 minute ago
40 minute ago