2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

அநுராதபுரம் நோக்கி...

Princiya Dixci   / 2021 மார்ச் 25 , பி.ப. 05:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில், தேசிய புத்தரிசி விழா, அநுராதபுரத்தில் ஏப்ரல் மாதம் 3ஆம் மற்றும் 4ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது. இதற்கு இணையாக நாடளாவிய ரீதியில் பல்வேறு புத்தரிசி  வைபவஙகள் நடைபெற்று வருகினறன.

இதன்படி, மட்டக்களப்பு மாவட்ட பிரதான வைபவம், கமநல அபிவிருத்தித் திணைக்கள பெறுப்பதிகாரி எம்.ஐ.எம்.பாயிஸ் தலைமையில், கமநல அபிவிருத்தித் திணைக்கள மட்டக்களப்பு மாவட்ட அலுவலகத்தில் இன்று (25) நடைபெற்றது.

இதன்போது, மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள 17 கமநல கேந்திர நிலைய பிரதேசங்களிலிருந்தும் பெறப்பட்ட 855 கிலோகிராம் அரிசி ஒன்றுசேர்க்கப்பட்டு, லொறியொன்றில் அநுராதபுரத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டன. 

இவ்வாறு 25 மாவட்டங்களிலும் இருந்தும் சேகரிக்கப்பட்ட அரிசியிலிருந்து மேற்படி தினத்தில் அநுராதபுரத்தில் அன்னதானம் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

(படங்கள் - ரீ.எல்.ஜவ்பர்கான்)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X