2025 மே 17, சனிக்கிழமை

அன்னை பூபதியின் 32ஆவது நினைவு தினம் அனுஷ்டிப்பு...

Editorial   / 2020 ஏப்ரல் 20 , பி.ப. 03:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம்.நூர்தீன்

இந்திய இராணுவத்தினரை இலங்கையில் இருந்து வெளியேறக்கோரி உண்ணாவிரத போராட்டம் இருந்து உயிர்நீத்த அன்னை பூபதியின் 32ஆவது நினைவு தினம், மட்டக்களப்பு, நாவலடியில் உள்ள அவரது சமாதியில், ஈகைச்சுடர் ஏற்றி, இன்று (20) அனுட்டிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாநகர முதல்வர் தி.சரவணபவன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன், மாநகர சபை உறுப்பினர் தவராஜா, அன்னை பூபதியின் குடும்பத்தினர் கலந்துகொண்டனர்.

இந்திய இராணுவம் வெளியேறுதல் உட்பட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தும் 19.03.1988ஆம் திகதியிருந்து 19.04.1988வரை உண்ணாவிரதமிருந்து அன்னை பூபதி உயிர்நீர்த்தமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .