2025 மே 13, செவ்வாய்க்கிழமை

அமிஷ்காவிற்கு நீதி கோரி மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம்...

R.Tharaniya   / 2025 மே 11 , மு.ப. 11:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாலியல் துஷ்பிரயோகத்தினால் தற்கொலை செய்து கொண்ட டில்ஷி அமிஷ்காவிற்கான நீதி கோரி மட்டக்களப்பில் ஞாயிற்றுக்கிழமை (11) அன்று கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று இடம் பெற்றது.

மட்டக்களப்பிலுள்ள பொது அமைப்புக்கள் சிவில் சமூக அமைப்புக்கள் பெண்கள் அமைப்புகள் இணைந்து இந்த கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்திருந்தது. இந்த ஆர்ப்பாட்டம் மட்டக்களப்பு நகரிலுள்ள காந்திப் பூங்காவுக்கு முன்னால் இடம் பெற்றது.  

மேலும் கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் போது ஆரியர் ஒருவரினால்  பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகி  தற்கொலை செய்து கொண்ட மாணவி   அமிஷ்காவிற்கான நீதி கோரி கோரிக்கை விடுக்கப்பட்டது டன்  மாணவிக்கு நீதி கோரிய பதாகைகள் சுலோகங்களையும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் தாங்கியிருந்தனர்.

இதன் போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் மெழுகுவர்த்தியை சுடரேற்றி மாணவிக்கான நீதியைக் கோரினர். இந்த கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் போது சிவில் சமூக பிரதிநிதிகள் பெண் சமூக செயற்பாட்டாளர்கள் சமூக சேவை அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். 

எம் எஸ் எம் நூர்தீன் ரீ.எல்.ஜவ்பர்கான்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X