2025 மே 25, ஞாயிற்றுக்கிழமை

அரியவகை கடல் பன்றி…

Princiya Dixci   / 2016 நவம்பர் 09 , மு.ப. 03:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

மன்னார், தாவில்பாடு கடலோரப்பகுதியில் கடற்பன்றி ஒன்று, நேற்றுச் செவ்வாய்க்கிழமை (08) கரையொதுங்கியது.  

இறந்த நிலையில் கரையொதுங்கிய குறித்த பன்றியானது, 5 அடி நீளமும் 450-500 கிலோகிராம் எடை கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.  

கடற்கரையில் ஏதோ விசித்திரமான பொருள் கரையொதுங்கியுள்ளதாக மீனவர்கள் தெரிவித்ததையடுத்து, உரிய இடத்துக்கு விரைந்த மன்னார் வனவிலங்கு உதவிப்பணிப்பாளர் அசோக ராஜபக்ஷ, இவ்வாறு கரையொதுங்கி இருப்பது அரியவகை இனத்தைச் சேர்ந்த கடல் பன்றி என்று கூறியுள்ளார். 

இது, இலங்கைக் கடலில் காணப்படுகின்றமை மிகவும் அபூர்வமானது என்றும் எமது நாட்டுக்கென்று மொத்தம் 8 கடல் பன்றிகளே காணப்படுகின்றன என்றும் அவர் தெரிவித்துள்ளார். 

எனினும், இவற்றுள் சில அழிவுறும் நிலையில் இருப்பதாகவும் இவை அழிவடைவதற்கான காரணம் குறித்துக் கண்டறியப்படவில்லை என்றும் தெரிவிக்கப்படுகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X