Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 14, புதன்கிழமை
Editorial / 2022 ஜூன் 20 , பி.ப. 02:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
வா.கிருஸ்ணா
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கடமையாற்றுவோர் இன்று எரிபொருள் வழங்குமாறு கோரி வைத்தியசாலையிலிருந்து ஆர்ப்பாட்ட பேரணியாக வந்து மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தினை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கடமையாற்றும் வைத்தியநிபுணர்கள்,வைத்தியர்கள், தாதியர்கள், சுகாதாரத்துறை ஊழியர்கள் என பல்வேறு தரப்பினரும் இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இன்றைய தினம் மதிய உணவு நேரத்தில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை முன்பாக ஒன்றுகூடியவர்கள் அங்கிருந்து கோவிந்தன் வீதியூடாக மட்டக்களப்பு நகரினை அடைந்து, மட்டக்களப்பு நகர் ஊடாக மாவட்ட செயலகம் வரையில் ஆர்ப்பாட்ட பேரணி நடைபெற்றது.
அதனை தொடர்ந்து மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தினை முற்றிகையிட்டு போராட்டம் முன்னெடுக்கப்பட்ட நிலையில், மாவட்ட செயலகத்தில் ஐந்து சுகாதார துறைசார்ந்தவர்கள் அழைக்கப்பட்டு பேச்சுவார்த்தை மாவட்ட அரசாங்க அதிபரினால் நடாத்தப்பட்டது.
இதன்போது மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கடமையாற்றுவோருக்கு எரிபொருளைப் பெற்றுக்கொள்வதற்கு ஏற்பாடு செய்து தருவதாக வழங்கப்பட்ட உறுதிமொழியையடுத்து போராட்டம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.
எனினும் தாங்கள் தொடர்ச்சியாக கோரிக்கையினை முன்வைத்து வந்தபோதிலும் மாவட்ட நிர்வாகம் அதனை கவனத்தில் கொள்ளாமல் செயற்பட்டு வந்ததாக இங்கு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.
அத்தியாவசிய தேவையாக கருதப்படும் சுகாதார சேவையில் ஈடுபட்டு வருவோர் வந்து செல்வதற்கான எரிபொரும் மிக அத்தியாவசியமானது எனவும், அவ்வாறு எரிபொருள் வழங்காவிட்டால் வைத்தியசாலையில் நோயாளர்களை பராமரிப்பதில் பாரிய சிக்கல் நிலைகள் ஏற்படும் எனவும், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் சார்பில் டாக்டர் மதனழகன் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
1 hours ago
4 hours ago
5 hours ago