Editorial / 2025 மார்ச் 20 , மு.ப. 10:43 - 0 - {{hitsCtrl.values.hits}}

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவுக்கும் இலங்கைக்கான இந்தோனேசிய தூதுவர் திருமதி டெவி குஸ்டினா டோபிங்கிற்கும் (Dewi Gustina Tobing) இடையிலான சந்திப்பொன்று பாராளுமன்ற வளாகத்தில் மார்ச் 19 ஆம் திகதி இடம்பெற்றது.
இராஜதந்திர மற்றும் பொருளாதார உறவுகளை மேம்படுத்துவதில் இரு நாடுகளினதும் அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்திய இச்சந்திப்பின் போது, வர்த்தகம், சுற்றுலா, தொழில்நுட்பம் மற்றும் கல்வி ஆகிய துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து கலந்துரையாடப்பட்டது.
சமய சுற்றுலா உள்ளிட்ட சுற்றுலாப் பரிமாற்றங்களை விரிவுபடுத்துவது குறித்தும் இதன்போது விசேட கவனம் செலுத்தப்பட்டது. இலங்கையின் விவசாயத் துறைக்கு ஆதரவளிப்பதற்கான வாய்ப்புகள் குறித்தும், குறிப்பாக பனை எண்ணெய் இறக்குமதி மற்றும் சேதன உரங்களை அறிமுகப்படுத்துவது குறித்தும் தூதுவர் பிரதமருடன் கலந்துரையாடினார். இக்கலந்துரையாடலில் இலங்கையின் பொதுப் போக்குவரத்து முறைமையில் மின்சார வாகனங்களைப் பயன்படுத்துவது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டதுடன், தகவல் தொழில்நுட்பத் துறையில் ஒத்துழைப்பு குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
பிரதமரின் மேலதிக செயலாளர் திருமதி சாகரிகா போகஹவத்த மற்றும் வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகள் குழு இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர். இந்தோனேசிய தூதுக்குழுவின் பிரதிநிதியாக துணை தூதுவர் ஃபிக்கி ஒக்டானியோன்ட் மற்றும் அமைச்சு ஆலோசகர் லைலால் கே. யுனியார்டி ஆகியோர் கலந்து கொண்டனர்.


45 minute ago
51 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
45 minute ago
51 minute ago
1 hours ago