2025 மே 25, ஞாயிற்றுக்கிழமை

இருவருக்கிடையே மோதல்: வீடு தீக்கிரை

Princiya Dixci   / 2016 ஒக்டோபர் 02 , மு.ப. 11:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

முந்தல் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பள்ளிவாசல்பாடுக் கிராமத்தில் அமைந்துள்ள வீடொன்றுக்கு, இன்று ஞாயிற்றுக்கிழமை  (02) அதிகாலை தீ வைக்கப்பட்டுள்ளதனால் அவ் வீடு முழுமையாக எரிந்து சாம்பலாகியுள்ளதுடன், வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளும் எரிந்து சாம்பலாகியுள்ளதாக முந்தல் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த வீட்டின் உரிமையாளருக்கும் மற்றொருவருக்குமிடையில் கடந்த சனிக்கிழமை மாலை, ஏற்பட்ட மோதலையடுத்து வீட்டின் உரிமையாளர் காயமடைந்து, முந்தல் மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்ற நிலையில், இந்த மோதலின் எதிரொலியாகவே குறித்த வீட்டுக்குத் தீ வைக்கப்பட்டிருக்கலாம் எனப் பொலிஸார் தெரிவித்தனர். (படப்பிடிப்பு: முஹம்மது முஸப்பிர்)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X