Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 15, வியாழக்கிழமை
Freelancer / 2021 ஜூன் 22 , பி.ப. 03:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
இரத்தினபுரி உதவும் கரங்கள் அமைப்பு
இரத்தினபுரி உதவும் கரங்கள் அமைப்பால், ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம் வாரீர் என்ற செயற்றிட்டத்தின் கீழ், பயணத்தடை காரணமாக வாழ்வாதாரத்தை இழந்திருந்த மக்களுக்கு உலருணவுப் பொதிகள் வழங்கிவைக்கப்பட்டன.
M
வள்ளிக்கேணியில் 40 பயனாளிகளுக்கான இடருதவிப் பொருட்கள்
மூதூர் கிழக்கின் கடற்கரைச் சேனைக் கிராம சேவகர் பிரிவில் உள்ள வள்ளிக்கேணி கிராமத்தில், பயணத்தடையால் சீவனோபாயமின்றி இன்னலுறும் 40 பயனாளிகளுக்கான இடருதவிப் பொருட்களை கிளிவெட்டி முத்துமாரியம்மன் கோவில் அர்ச்சகர் சிவஸ்ரீ ஸ்ரீரூப சர்மா, சம்பூர் வலய அனர்த்தப் பாதுகாப்பு அமைப்பினூடாக வழங்கி வைத்தார்.
இதற்கான நிதி அனுசரணையை சுப்பிரமணியம் விஜியலட்சுமி தம்பதியினர் வழங்கியிருந்தனர்.
இந் நிகழ்வில், கோவில் அர்ச்சகர் சிவஸ்ரீ ஸ்ரீரூப சர்மா, சம்பூர் வலய அனர்த்தப் பாதுகாப்பு அமைப்பின் தலைவர் து. ஜெகன் ஆகியோருடன் கிளிவெட்டி புளிய மரத்தடி சங்கத்தின் உறுப்பினர்களும் இணைந்து கொண்டு, இடருதவிப் பொருட்களை வழங்கி வைத்தனர். (அ . அச்சுதன்)
கண்டி தமிழ் வர்த்தகர் சங்கம் உதவி
கண்டி தமிழ் வர்த்தகர் சங்கம், றக்சாவ, கல்பிஹில்ல, காலகட, ஆத்தளை, கவத்தன்னை, உனனகலை, மாவுசா, நெல்லிமலை, சோலங்கந்தை போன்ற பகுதிகளில் வறுமையில் வாடும் மக்களுக்கு உலர் உணவுப் பொருட்களை வழங்கி வைத்தது.
பன்விலை சைவ மகா சபையின் தலைவர் எஸ். சுரேஸ்குமார், சங்கத்தின் தலைவர் ஆர். அன்பழகன், பொருளாளர் எஸ்.எச். சார்ள்ஸ் உட்பட சங்க உறுப்பினர்கள் பலரும் மக்கள் வசிக்கும் பிரதேசத்துக்குச் சென்று பொதிகளை வழங்கி வைத்தனர்.
M
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago