2025 செப்டெம்பர் 09, செவ்வாய்க்கிழமை

உதவும் கரங்கள்...

Freelancer   / 2021 ஜூன் 29 , மு.ப. 10:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹஸ்பர் ஏ ஹலீம்

திருகோணமலை பொது மருத்துவமனைக்கு ஒருதொகுதி நன்கொடைகள் நேற்று (28) வழங்கி வைக்கப்பட்டன.

இந்த நன்கொடைகள், “ஸ்ட்ரீட் சைல்ட்” நிறுவனத்தின் அனுசரணையுடன் வழங்கி வைக்கப்பட்டன.

ஜனாதிபதி செயலணியின் திருகோணமலை மாவட்ட கொவிட் 19 பதிலிறுத்தலுக்கான இணைப்பாளரதும், அரச சார்பற்ற நிறுவனங்களின் சம்மேளனத்தின் ஊடாகவும் வழங்கப்பட்ட இந்த நன்கொடையில்,  ஒரு இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய்  பெறுமதியான சில மருத்துவம் சாராத உபகரணப் பொருள்கள் அடங்குகின்றன.

 கொவிட் 19 பதிலிறுத்தலுக்கான இணைப்பாளர் டொக்டர் என். ரவிச்சந்திரன்,  “ஸ்ட்ரீட் சைல்ட்” திட்ட முகாமையாளர்  கஜேந்திரன் ஆகியோர், இந்த பொருள்களை, திருகோணமலை  பொது மருத்துவமனை பணிப்பாளர் டொக்டர் ஜகத் விக்ரமரத்னவிடம் வழங்கி வைத்தனர்.

M


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X