2025 செப்டெம்பர் 04, வியாழக்கிழமை

ஊடகவியலாளர் சுகிர்தராஜனின் நினைவேந்தல்

Princiya Dixci   / 2021 ஜனவரி 24 , பி.ப. 03:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் சுப்பிரமணியம் சுகிர்தராஜனின் 15ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு, மட்டக்களப்பில் அமைந்துள்ள கிழக்கு ஊடகவியலாளர் ஒன்றியத்திலும் அம்பாறை ஊடக மையத்திலும் இன்று (24) அனுஷ்டிக்கப்பட்டது.

கிழக்கு தமிழ்  ஊடக ஒன்றியத்தின் ஏற்பாட்டில்  சுகாதார விதி முறைகளுக்கு அமைய நடைபெற்ற இந்த நிகழ்வுகளில் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் த.கலையரசன், மட்டக்களப்பு மாநகர மேயர் தி.சரவணபவான், காரைதீவு பிரதேச சபைத் தவிசாளர் கி. ஜெயசிறில், மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான பா.அரியநேத்திரன், சீ.யோகேஸ்வரன், ஞா.சிறிநேசன், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் த.சுரேஸ், சிலோன் மீடியா போரத்தின் தலைவர் ரியாத் ஏ.மஜீத் மற்றும் ஊடகவியலாளர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

படுகொலை செய்யப்பட்ட  ஊடகவியலாளர் எஸ்.சுகிர்தராஜனின் திருவுருவப்படத்துக்கு இதன்போது  மலர்மாலை அணிவித்து, ஈகைச்சுடர் ஏற்றி, 2 நிமிட மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டது.

மட்டக்களப்பு, குருமண்வெளியை பிறப்பிடமாகக்கொண்ட சுகிர்தராஜன், அம்பாறை, வீரமுனையில் வசித்துவந்த நிலையில் பணி நிமித்தம் திருகோணமையில் தங்கியிருந்தார். 2006ஆம் ஆண்டு ஜனவரி 24ஆம் திகதி திருகோணமலையில் உள்ள ஆளுநர் செயலகத்துக்கு அருகாமையில் வைத்து அவர் சுட்டுக்கொல்லப்பட்டார்.

(படங்கள் - எம்.என்.எம்.அப்ராஸ், எஸ்.சபேசன், வா.கிருஸ்ணா, வ.சக்தி, கனகராசா சரவணன், எம்.எஸ்.எம்.நூர்தீன்)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .