2025 ஜூலை 19, சனிக்கிழமை

ஏர்ப்பூட்டு விழா ..

Editorial   / 2019 செப்டெம்பர் 24 , பி.ப. 03:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை கமநல சேவைகள் திணைக்களத்தின் ஒழுங்கமைப்பில், தகரவெட்டுவான், முத்துநகர் ஆகிய இரு விவசாய சம்மேளனங்களும் இணைந்து ஏற்பாடு செய்த 2019/2020அம் ஆண்டுக்கான ஏர்ப்பூட்டு விழா, முத்துநகர் விவசாய முன்றலில் நேற்று (24) காலை நடைபெற்றது.

விவசாயச் சம்மேளனங்களின் பங்கேற்புடன் நடைபெற்ற இந்நிகழ்வின் பிரதம அதிதியாக, துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை பிரதியமைச்சர் அப்துல்லா மஃறூப் கலந்துகொண்டு, விவசாயச் சமூகத்துடன் இணைந்து வயல் விதைப்பதற்கான ஆரம்ப நிகழ்வுகளை அங்குரார்ப்பணம் செய்துவைத்தார்.

இதன்போது, மழை வேண்டியும் நல்லதொரு விளைச்சல் கிடைக்க வேண்டுமென வேண்டியும், மத அனுஷ்டானங்களும் இடம்பெற்றன.

(படங்கள்: தீஷான் அஹமட், ஹஸ்பர் ஏ ஹலீம், ஒலுமுதீன் கியாஸ்)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X