2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

ஐயாவுக்கு சுடரேற்றி அஞ்சலி

Editorial   / 2024 ஜூலை 02 , மு.ப. 10:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

நிதர்சன் வினோத்

இலங்கை தமிழரசு கட்சியின் பெருந்தலைவரும் முன்னாள் எதிர்க்கட்சி தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான இராஜவரோதயம் சம்பந்தனுக்கு யாழில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

இலங்கை தமிழரசு கட்சியின் யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை தொகுதிக்கிளை அலுவலகத்தில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஈ. சரவணபவன் தலைமையில், திங்கட்கிழமை (01) மாலை இந்த அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றது.

இதன் போது அலுவலகத்தின் முன்றலில் கட்சி கொடி அரைக் கம்பத்தில் பறக்கவிடப்பட்டது. தொடர்சியாக அன்னாரின் திருவுருவ படத்திற்கு ஈகைச்சுடரேற்றி மலரஞ்சலி செலுத்தபட்டது.

இதன் பொழுது பாராளுமன்ற முன்னாள் உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவன், முன்னாள் காரைநகர் பிரதேச சபை தவிசாளர் பாலசந்திரன், வலிகாமம் மேற்கு முன்னாள் தவிசாளர் நாகரஞ்சினி, முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்கள் , கட்சியின் வட்டுக்கோட்டை தொகுதி மகளீர் அணி , தொண்டர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X