2025 மே 16, வெள்ளிக்கிழமை

ஓராண்டு கடந்தது...

Kogilavani   / 2021 மே 26 , மு.ப. 11:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

துவாரக்ஷான்

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் முன்னாள் தலைவர் அமரர் ஆறுமுகன் தொண்டமானின் ஓராண்டு நினைவுதினத்தையொட்டி, நுவரெலியா பிரதேச சபையில் விசேட அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றது.

நுவரெலியா பிரதேச சபையின் தவிசாளர் வேலு யோகராஜின்  ஏற்பாட்டில் பொதுசுகாதார விதிமுறைகளுக்கு அமைவாக நடைபெற்ற இந்நிகழ்வில், அமரர் ஆறுமுகன் தொண்டமானின் திருவுருவப் படத்துக்கு மலர்மாலை செலுத்தி, தீபங்கள் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.

அத்துடன் பிரதேச சபை வளாகத்தில் மரக்கன்றுகளும் நடப்பட்டன.

மேலும்,  நானுஓயா ரதெல்ல கீழ், மேற்பிரிவு பிரிவுகள், எடின்புரோ, டெஸ்போட், கிரிமிட்டிய, பிளக்பூல் மீப்பிளிமான, சென் ஜோன்ஸ், கந்தபளை ஆகியப் பகுதிகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள குடும்பங்களுக்கு, உலருணவுப் பொருட்களும் கையளிக்கப்பட்டன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .