2025 டிசெம்பர் 16, செவ்வாய்க்கிழமை

கஜமுத்துகள்…

Princiya Dixci   / 2022 மே 30 , மு.ப. 11:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

அம்பாறை பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைவாக,  இங்கினியாகல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட அலுஎல பகுதியில் சனிக்கிழமை (28) மாலை மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் மீட்கப்பட்ட 76 கஜமுத்துகளை படங்களில் காணலாம்.

இவற்றைத் தன்வசம் வைத்திருந்த சந்தேகத்தில் 67 வயதுடைய முன்னாள் வன ஜீவராசிகள் திணைக்கள உத்தியோகத்தர் ஒருவரை விசேட அதிரடிப் படையினர் கைது செய்துள்ளனர்.

விசேட அதிரடிப் படையினரால் கைப்பற்றப்பட்ட இந்த கஜமுத்துகளின் பெறுமதி சுமார் 65 இலட்சத்துக்கும் அதிகமாகும் என்பதுடன், சம்பவம் தொடர்பில்  இங்கினியாகல பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

(படங்கள் - பாறுக் ஷிஹான்)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .