Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 01, வியாழக்கிழமை
Janu / 2024 செப்டெம்பர் 25 , பி.ப. 05:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கத்தின் அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் அமைச்சுச் செயலாளர்கள் பயன்படுத்திய பெருமளவிலான 'உயர்ரகத' வாகனங்கள் தற்போது கொழும்பு காலி முகத்திடத்தில் நிறுத்தப்பட்டுள்ளன.
இலங்கை மன்ற கல்லூரி மற்றுமு் லக்சலாவிற்கு அருகாமையில் வேறு வாகனங்கள் இவ்வாறு நிறுத்தப்பட்டுள்ளன.
அவற்றைப் பயன்படுத்திய அதிகாரிகள் அநுரகுமார திஸாநாயக்க ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர், பல இடங்களில் இவ்வாறு நிறுத்திவிட்டு சென்றுவிட்டனர் என்று தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்று உறுப்பினர் வசந்த சமரசிங்க, வாகனங்களை பார்வையிட்டதன் பின்னர் இவ்வாறு தெரிவித்தார்.
அநுர திஸாநாயக்க ஜனாதிபதியாக இல்லாவிட்டால் இந்த வாகனங்கள் இன்னும் வீதியில் ஓடும் எனவும் சமரசிங்க தெரிவித்தார்.
பொதுமக்களின் எரிபொருள் மற்றும் பணத்தைப் பெற்றுக்கொண்டு வாகனங்கள் பராமரிக்கப்பட்டதாக தெரிவித்த வசந்த சமரசிங்க, ஜனாதிபதி அலுவலகத்திற்குச் சொந்தமான 833 வாகனங்கள் உள்ளதாக பதிவேடுகளில் உள்ளன என்றார்.
அந்த 833 வாகனங்களில் 29 வாகனங்கள் 2022 ஆம் ஆண்டளவில் காணாமல் போயுள்ளதாகவும், முன்னாள் ஜனாதிபதிகளான ரணில் விக்ரமசிங்க, மஹிந்த ராஜபக்ஷ, மைத்திரிபால சிறிசேன, கோட்டாபய ராஜபக்ஷ, சந்திரிகா குமாரதுங்க ஆகியோர் அந்த வாகனங்களை விழுங்கினார்களா என்ற பிரச்சினையும் எழுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
7 hours ago
9 hours ago
30 Apr 2025