2025 டிசெம்பர் 15, திங்கட்கிழமை

கடற்படையினர் தயார்

Editorial   / 2024 ஜூன் 02 , பி.ப. 12:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

 மோசமான காலநிலையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக  நிவாரணக் குழுக்கள் பேரிடர் நிவாரண நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

களுத்துறை மாவட்டத்தின் புளத்சிங்கல, புவக்பிட்டிய, பாலிந்தநுவர மற்றும் காலி மாவட்டத்தின் வெலிபன்ன, அக்குரஸ்ஸ மற்றும் பானடுகம ஆகிய இடங்களுக்கு கடற்படையின் அனர்த்த நிவாரண குழுக்களை அனுப்பப்பட்டுள்ளன.

இதன்படி, களுகங்கை, கிங் கங்கை மற்றும் நில்வலா கங்கையின் பிரதான ஆறுகள் மற்றும் கிளை நதிகள் அதிக மழை காரணமாக நிரம்பி வழியும் மட்டத்தை எட்டியுள்ளதால், புளத்சிங்களவில் பத்து (10) கடற்படை அனர்த்த நிவாரணக் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன, அவை புவக்பிட்டிய, பாலிந்தனுவர பகுதிகளுக்கு நியமிக்கப்பட்டுள்ளன

மேலும், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணம் வழங்க, உடனடி நடவடிக்கை கடற்படை, சிறப்புக் கடற் படை மற்றும் கரையோர படை உள்ளிட்ட கடற்படையின் நூற்று பதினாறு (116) கூடுதல் நிவாரணக் குழுக்கள் தயார் நிலையில் உள்ளன.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .