2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

கடற்றொழில் பாதிப்பு...

Princiya Dixci   / 2020 நவம்பர் 25 , பி.ப. 05:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

வங்காள விரிகுடாவில் ஏற்பட்ட தாழமுக்கம் காரணமாக, திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் காற்று, மழையின் தாக்கம் அதிகரித்துள்ளது. 

இதனால் அம்மாவட்டங்களின் மீனவர்கள் தொழிலுக்குச் செல்லவில்லை.  கடந்த இரு நாட்களாக இந்நிலை நீடிப்பதால் மீன்பிடி நடவடிக்கைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.

கடல் கொந்தளிப்பு காரணமாக கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேணடாமென, வானிலை அவதான நிலையம் கேட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் சுமார் 26 ஆயிரம் குடும்பங்கள் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

(படங்கள் - அ.அச்சுதன், ரீ.எல்.ஜவ்பர்கான்)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X